Scorpio (விருச்சிகம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Viruchigam Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Scorpio (விருச்சிகம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Viruchigam Rasi Palangal Free Tamil 2011 2012

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 10-ல் பலம் பெற்று குருவின் பார்வையைப் பெறுகிறார். செவ்வாயும் தன் ராசியைப் பார்க்கிறார். 11-ஆம் இடத்து சனியும் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது. இருந்தாலும் இன்னும் இரண்டு மாதத்தில் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு ஏழரைச் சனி வருகிறதே- அது எப்படி இருக்கும்? அது என்ன செய்யும் என்ற கற்பனை பயமும் ஏற்படுகிறது. விருச்சிக ராசிக்கு 12-ல் உச்சமடையும் சனி குரு பார்வையைப் பெறுவதால் சுபவிரயம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். 'நான் செய்யும் வினைதான் என் செய்யும் கோள் என் செய்யும் கொடுங்கூற்று என் செய்யும் தாளும் சிலம்பும் முருகன் கை வேலும் என்முன் தோன்றிடினே' என்று முருக பக்தர் பாடியதுபோல, ஞானசம்பந்தர் 'ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல' என்று பாடியதுபோல அடியார்களாக மாறிவிடுங்கள். நவகிரகங்களும் அனுக்கிரகங்களாக மாறிவிடும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.