Sagittarius (தனுசு) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Dhanus Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Sagittarius (தனுசு) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Dhanus Rasi Palangal Free Tamil 2011 2012

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 5-ல் இருந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார்; வக்ரமாக இருக்கிறார். 5-ஆம் இடம் மனசு, திட்டம், மகிழ்ச்சி, ஆகியவற்றைக் குறிக்கும் இடம். குருவின் பார்வை 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களுக்கும் கிடைக்கிறது. ஜென்ம ராசியையும் பார்க்கிறார். அதனால் உங்கள் திட்டங்களும் தேவைகளும் பூர்த்தியடையும். தகப்பனாரின் ஆதரவு பெருகும். பக்திப் பரவசமும் கூடும். (பூர்வ பண்ணிய ஸ்தானம்). செய்முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். கௌரவமும் செல்வாக்கும் பெருகும். 10-ஆம் இடத்தையும் 10-க்குடைய புதனையும், 10-ல் உள்ள சனி பார்ப்பதால், சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் வெளியூர் வேலை வாய்ப்பும் உண்டாகும். புதனை செவ்வாயும் பார்க்கிறார். விரும்பிய வேலை அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஏற்படும். 4-ஆம் இடத்தை சனி பார்ப்பதோடு செவ்வாயும் பார்க்கிறார். 3-ஆம் இடத்தையும் செவ்வாய் பார்க்கிறார். மனதில் குழப்பங்கள் விலகும். தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். அதுவே உங்களின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். மனபலமே உடல்பலம்.

No comments:

Post a Comment

Powered by Blogger.