Libra (துலாம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Thulam Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Libra (துலாம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Thulam Rasi Palangal Free Tamil 2011 2012

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 2-ல் இருக்கிறார். துலா ராசியின் யோகாதிபதியான சனியின் சாரத்திலும் பிறகு பாக்கியாதிபதியான புதனின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அத்துடன் புதனோடு சேர்க்கையும், சனியின் பார்வையும் கிடைக்கப் பெறுகிறார். சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் பார்க்கிறார். ஜென்ம ராசிக்கும் குரு பார்வை கிடைக்கிறது. ஆன்மிகப் பணியில் நாளுக்கு நாள் செலவுகளும் கூடுகிறது; வருமானமும் பெருகுகிறது. ஆனாலும் இன்னமும் தேடுதல் நிற்கவில்லை. ஏசுநாதர் சொன்னதுபோல தேடுங்கள் கிடைக்கப் பெறும்; தட்டுங்கள் திறக்கப்படும். வீடு கட்ட, வாகனம் வாங்க அல்லது மாற்ற, கட்டடம் சீர்திருத்தம் செய்ய என எல்லாத் திட்டங்களும் நிறைவேறும். சுப முதலீடுகளும் உருவாகும். 11-ஆம் இடத்துச் செவ்வாயும் அவரைப் பார்க்கும் குருவும் உங்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் வாரி வழங்குவார்கள்.

No comments:

Post a Comment

Powered by Blogger.