Sani Peyarchi Palangal 2012 in Tamil | Cancer (கடகம்) Astrology Predictions | Kadagham Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Sani Peyarchi Palangal 2012 in Tamil | Cancer (கடகம்) Astrology Predictions | Kadagham Rasi Palangal Free Tamil 2011 2012

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிநாதன் சந்திரன் ஆரோகணகதியாக சஞ்சரிக்கிறார். 9-க்குடைய குரு 10-ல் இருக்கிறார். 10-க்குடைய செவ்வாயையும் பார்க்கிறார். பரிபூரணமாக தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகர்யங்களுக்கும் குறைவிருக்காது. அதேசமயம் எதிலும் நிறைவிருக்காது. 10-ல் குரு வக்ரமாக இருக்கும் வரை, நேரடி பஸ்ஸில் பயணம் போகாமல் மாறி மாறிப் போவதுபோல தொழிலும் சம்பாத்தியமும் மாறி மாறிப் போய்க்கொண்டே இருக்கும். ஆனாலும் தேவைகள் பூர்த்தியடையும். 5-ஆம் இடத்தில் புதன், சுக்கிரன், ராகு சம்பந்தம் பெற்று, செவ்வாய், சனி பார்வையைப் பெறுவதால் எதிர்காலத்திட்டங்களில் திருத்தங்களையும் மாறுதல்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். நிலையான கொள்கை, உறுதிப்பாடுக்கு இடமிருக்காது.

No comments:

Post a Comment

Powered by Blogger.