சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசமாக இருந்தாலும் நீசபங்கம் பெறுகிறார். ஜென்ம ராசியில் பாக்கியாதிபதி செவ்வாய் பலம் பெற்று குருவின் பார்வையைப் பெறுகிறார். ஏழரைச் சனி இன்னும் இரண்டு மாதங்களில் முடியப் போகிறது. 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்றதுபோல, சனி மாறுவதற்கு முன்னமே உங்களுக்கு நல்ல அறிகுறிகளைக் காட்டி விட்டுப் போவார். எதிரிகள் எல்லாம் உதிரிகளாகி விடுவார்கள். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றதுபோல உங்களைச் சார்ந்தோரும் உங்களால் நன்மையடைவார்கள். பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு, 'கருடா சவுக்கியமா?' என்று கேட்டதுபோல ஒருசிலர் உங்களைப் பார்த்துக் கேட்கலாம். நீங்களும், 'இருக்குமிடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே' என்று அவர்களை உதாசீனப் படுத்துவீர்கள். மொத்தத்தில் முட்டாளுமில்லை; கெட்டிக்காரனுமில்லை. நேரம் காலம் முட்டாளையும் அறிவாளியாக்கும்; வீரனையும் கோழையாக்கும்.

No comments:
Post a Comment