Sani Peyarchi Palangal 2012 in Tamil | Gemini (மிதுனம்) Astrology Predictions | Mithunam Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Sani Peyarchi Palangal 2012 in Tamil | Gemini (மிதுனம்) Astrology Predictions | Mithunam Rasi Palangal Free Tamil 2011 2012

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 6-ல் மறைகிறார். 6-க்குடைய செவ்வாய் 3-ல் அமர்ந்து புதனைப் பார்க்கிறார். 8-க்குடைய சனி 4-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். சகோதர வகையில் சச்சரவுகளை சந்திக்க நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் உடனிருப்போரின் தொல்லைகளைச் சுமக்க நேரலாம். திட்டமிட்ட முயற்சிகளிலும் காரியங்களிலும் தடை, தாமதங்களைச் சந்திக்கக் கூடும். 5-ல் சூரியன் நீசமடைவதால் பிள்ளைகள் வகையிலும் தொல்லைகளை அனுபவிக்க வேண்டும். நிலம் தொடர்பான விஷயங்களில்- ரியல் எஸ்டேட், பூமி சம்பந்தப்பட்ட தொழில்களில் கடுமையான முயற்சி செய்ய நேரும். அதேசமயம் உழைப்புக்கேற்ற பலனையும் அடையலாம். 10-ஆம் இடத்திற்கு சனி பார்வை. சிலருக்கு பணியிடம் மாறலாம். அல்லது வேலைச்சுமை அதிகரிக்கலாம். சுயதொழில் அதிபர்களுக்கு லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். கொள்முதல் ஸ்டாக்குகளை சேமித்து வைக்காமல் கவனமாக நடந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.