Capricorn (மகரம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Magaram Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Capricorn (மகரம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Magaram Rasi Palangal Free Tamil 2011 2012

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 9-ல் இருக்கிறார். 9-க்குடைய புதனும் 10-க்குடைய சுக்கிரனும் 11-ல் சேர்ந்திருக்கிறார்கள். தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும். 4-ல் உள்ள குரு 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை மகிழ்ச்சிக் கடலில் தள்ளும். அதேசமயம் பணச் சுமையும் அதிகமாகும். நீங்கள் வகிக்கும் அல்லது ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் ஏற்கெனவே இருந்தவர்கள் செய்த தவறுகளைத் தோண்டித் துருவிக் கண்டுபிடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். விடாமுயற்சியோடு செயல்பட்டால் புதையல் எடுத்ததுபோல தவறுகளைக் கண்டுபிடித்து தவறு செய்தவர்களை நீதிக்குமுன் நிறுத்தலாம். அதனால் சுற்றி உள்ளோரின் பகைகளையும் ஏற்கத் தயாராக இருங்கள். இருந்தாலும் உங்கள் வாய்மையும் தூய்மையும் நேர்மையும் உங்களுக்கு துணையாக நின்று வழிநடத்தும். சுனாமியிலேயே ஸ்விம்மிங் (நீச்சல்) போடுகிற பக்குவம் பெற்ற உங்களுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம். மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.

No comments:

Post a Comment

Powered by Blogger.