Aquarius (கும்பம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Kumbham Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Aquarius (கும்பம்) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Kumbham Rasi Palangal Free Tamil 2011 2012

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

ராசிநாதன் சனி 8-ல் மறைந்தாலும் செவ்வாயின் சாரம் பெறுகிறார். செவ்வாய் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை கிடைக்கிறது. ஆகவே, மெயின் டிரான்ஸ்பார்மரில் இருந்து சப்-கனக்ஷனை வாங்கி பவர் கொடுப்பதுபோல உங்கள் காரியங்களில் வெற்றியும் நன்மையும் உண்டாகும். சனி, செவ்வாய், குரு சம்பந்தத்தின் பலன் அதுதான். செவ்வாயின் சாரம் பெற்றதிலிருந்து துலா ராசியின் பலன் சனிக்குக் கிடைத்துவிடுகிறது. அதாவது 9-ஆம் இடத்து சனியின் பலன் உச்ச பலன். எனவே, இப்போதிருந்தே அட்டமத்துச் சனி முடிந்த மாதிரிதான். உங்கள் காரியங்களிலும் நல்ல திருப்பமும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். பொருளாதார நிலையிலும் முன்னேற்றமான திருப்பங்கள் உருவாகும். தனாதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால், தாராளமான வரவு- செலவுகளுக்கு இடம் உண்டாகும். சிலருக்கு சுப பயணமும் பயணத்தால் பலனும் ஏற்படும். தேக நிலையிலும் முன்னேற்றமும் உண்டாகும்.

No comments:

Post a Comment

Powered by Blogger.