மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 2-ல் வக்ரம் அடைகிறார். 2-க்குடைய செவ்வாய் 6-ல் மறைந்தாலும் அவரைப் பார்க்கிறார். செவ்வாயும் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அத்துடன் 4-க்குடைய புதனும் 9-ல் நிற்க, அவரையும் செவ்வாய் பார்க்கிறார். வாக்கு, தனம், குடும்பம், வித்தை, கல்வி, சுகம் பூமி, வீடு, வாகனம் ஆகிய 2-ஆம் பாவம், 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட பலன்கள் எல்லாம் உங்களுக்கு அனுகூலமாகவும் ஆதரவாகவும் அமையும். உடல்நிலையில்- தேக ஆரோக்கியத்தில் சற்று அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியில் மாற்றமிருக்காது. இல்லறத் துணைவியின் யோசனைகள் நலம் தரும். ஆனாலும் 7-ல் சனி இருப்பதால் நெல்லிக்கனி போல முதலில் துவர்க்கும்; பின்பு இனிக்கும். தொழில், வருமானம், குடும்பச் சூழ்நிலை எல்லாம் வழக்கம்போல செயல்படும். உங்கள் ஆன்மீகப் பயணங்களும் தெய்வ ஸ்தல யாத்திரைகளும் பிரார்த்தனைகளும் பலன் தரும்; வெற்றி தரும்.

No comments:
Post a Comment