Sani Peyarchi Palangal 2012 in Tamil | Aries (மேஷம்) Astrology Predictions | Mesha Rasi Palangal Free Tamil 2011 2012 - Trend Speaks

Tuesday, November 8, 2011

Sani Peyarchi Palangal 2012 in Tamil | Aries (மேஷம்) Astrology Predictions | Mesha Rasi Palangal Free Tamil 2011 2012

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 5-ல் திரிகோணம் பெறுகிறார். குருவின் பார்வையையும் பெறுகிறார். 5-க்குடைய சூரியன் நீச ராசியில் நின்றாலும் நீசபங்கம் பெறுகிறார். வீண் செலவுகளாலும் கடன் பிரச்சினைகளாலும் மன உளைச்சல் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளும் சுபச் செலவுகளும் அதிகரிக்கும். அத்தியாவசியமான பயணங்களினால் செலவுகள் உண்டாகும். சிலர் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்ய முடியாத நிலையில் அலைச்சல், திரிச்சல்களுக்கு ஆட்படலாம். வருமானம் ஓரளவு கணிசமாக வந்தாலும் அதை சேமிக்க முடியாதபடி தவிர்க்கமுடியாத செலவுகளைச் சந்திக்க நேரும். 2-ஆம் இடத்தில் உள்ள கேது, குடும்பத்தில் புரிந்துகொள்ளாமல் அர்த்தத்தை அனர்த்தமாக்கி வருத்தமுண்டாகும் சூழ்நிலையை உருவாக்கும். என்றாலும் ஜென்ம குரு அந்தந்த நேரம் ஏற்படும் சலிப்புகளை மாற்றிவிடுவார்.

No comments:

Post a Comment

Powered by Blogger.