2012 Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி November - December 2011 Continued to 2012 | Palan for all Rasi in Tamil - Trend Speaks

Sunday, November 13, 2011

2012 Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி November - December 2011 Continued to 2012 | Palan for all Rasi in Tamil


சனி பெயர்ச்சி திருகனித பஞ்சங்கப்படி 15/11/2011 அன்று நடைபெறுகிறது. வாக்கிய பஞ்சங்கப்படி பார்த்தோமென்றால் 21/12/2011 அன்று நடைபெறுகிறது. துலா ராசியில் சென்று உச்சம் அடைந்து சித்திரை , சுவாதி மற்றும் விசாக நட்சத்திர சாரங்களில் இரண்டரை ஆண்டு காலம் உலா வர போகிறார். ஒவ்வொரு ராசிகரர்களுக்கும் அவர் என்ன பலன்களை தரபோகிறார் என்பதை இங்கே சுருக்கமாக எழுதி உள்ளேன்.படித்து பயன் பெறவும்.


மேஷ ராசி : செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும் .வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்வோர்கள், ஆடை அலங்கார தொழில் செய்வோர்கள் மற்றும் வாகனத்தை வைத்து தொழில் செய்வோர்கள் சிறந்த முறையில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டு தொழில் புரிவோர் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. பெண்கள் கணவரிடம் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் நல்லது. திருமண முயற்சிகள் தாமதப்பட்டு பிறகு நடக்கும்.

ரிஷப ராசி : தொழில் செய்பவர்கள் கடன் கிடைகிறது என்று வாங்கி போட்டு அகலக்கால் வைக்க முயற்சி செய்யாமல் இருப்பது நன்மை தரும். தந்தை வழியில் மருத்துவ பிரச்சனைகள் , பூர்விக சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. பணியில் உள்ளவர்களுக்கு மிக சிறப்பான காலம் இது. உத்தியோக உயர்வுகள், புதிய பொறுப்புகள் தானாக ஏற்படும். பெண்களுக்கு மருத்துவ செலவுகள் , சிறு சிகிச்சைகள், குழந்தை பிறப்புக்காக மருத்துவமனையில் அனுமதிகபடுவது போன்ற நிலை ஏற்படலாம்.
மிதுன ராசி : தந்தை வழியில் சொத்துகள் சேரும். ஆனால் போராடித்தான் அதை அடைய முடியும். குழந்தை பிறப்புகள் குடும்பத்தில் உண்டு. மிக கவனமுடன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. வீடு , நிலம் வாங்குவடர்க்கு பலமான யோகம் இருக்கிறது. வருங்காலத்திற்கான முதலீடுகளை செய்து கொள்ள சூழ்நிலைகள் ஏதுவாக அமையும்.
கடக ராசி : மனைவி வழியில் சொத்துகள் சேரும். தாயார் உடல்நிலை பாதிக்கப்படும். தன்னுடைய வண்டி வாகனங்கள் அடிகடி ரிப்பேர் ஆகி செலவுகள் வைக்கும். சொத்து சம்பந்தமான வில்லங்கங்கள் ஏற்பட்டு விலகும். மாமனார் வீட்டில் மதிகபடுவீர்கள்.
சிம்ம ராசி : தைரியம் அதிகரிக்கும். ஏழரை சனியில் இருந்து ஒரு வழியாக விடுபடும் வைப்பு ஏற்படுகிறது. சுதந்திரமான காற்றை சுவாசிக்கலாம் இனி. வாழ்கை,உறவினர்கள், நண்பர்கள் கற்று தந்த பாடங்களை வைத்து இனி முன்னேற்ற பாதையில் நடை போடலாம். இழந்த சொத்துகள், உறவுகள், பதவிகள் திரும்ப கிடைக்க பெறுவீர்கள். கலை துறையினருக்கு இனி புகழ் தேடி வரும் காலம் ஆகும்.
கன்னி ராசி : நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் . இது வரை உங்களை விரட்டி வந்த பனி சுமைகள் , நிம்மதி அற்ற சூழ்நிலைகள், மண்டையை குடைந்து கொண்டு இருந்த பிரச்சனிகள் அகன்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். வருமானம் உயர்வதற்கான வாய்புகள் படி படி யாக ஏற்படும்.
துல ராசி : சொந்த வீடு வாங்கும் நேரம் இது. பிள்ளைகளால் வருமானம் உயரும். சமுகத்தில் நல்ல மதிப்பு மரியாதையை ஏற்படும். சுய தொழில் கை நிறைய orde கிடைத்து செய்வதற்க்கே திணறுகின்ற சூழ்நிலை ஏற்படும். பணிபுரிவோருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடக்கும்.
விருசிக ராசி : செலவுகள் வரிசை கட்டி காத்திருக்கும் நேரம் இது. முடிந்த வரை சுப செலவுகளாக மாற்றி கொள்ள முயற்சி செய்யவும்.தீடிர் என்று ஏற்படும் பற்றகுறைகளை சமாளிக்க நகைகள் வைத்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க வேண்டி இருந்தால் வங்கி நல்ல செலவுகளாக மாற்றி கொள்ளுங்கள். அலைச்சல்கள் அதிகரித்து சோர்வு அடைவீர்கள். சிறு உபதைகளைகளையும் உடனடிக மருத்துவரிடம் சென்று காட்டி சரி செய்துகொள்ளவும்.
தனுசு ராசி: தங்க நகைகள், பங்கு பத்திரங்கள் என சேமிப்புகள் உயரும் நேரம்.இடம் பூமி வாங்கும் அளவுக்கு சேமிப்புகள் ஏற்படாவிட்டாலும் முறையான வழக்கமான சேமிப்புகள் ஏற்படும். சுய தொழில் புரிவோருக்கு கடுமையாக உழைத்து தொழில் உயர்வடைய வாய்புகள் தேடி வரும். பணி புரிவோர் உயர் அதிகாரிகளின் கோப பார்வைக்கும் கண்டிப்புக்கும் ஆளாகி பணி மீதே வெறுபடையும் சூழ்நிலை உருவாகும்.

மகர ராசி : தொழில் புரிவோருக்கு உன்னதமான நேரம்.உழைப்பின் பலன்கள் பல மடங்காக அனுபவிக்கும் நேரம். பண வரவுகள் தாரளமாக ஏற்பட்டு தொழிலுக்கு தேவையான மூலபொருட்கள் , உபகரணங்கள் வாங்குவீர்கள். பணி புரிவோருக்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.மதிப்பு மரியாதைகள் சமுகத்தில் பன்மடங்கக உயரும் .
கும்ப ராசி : தொழில் சிறப்பாக இருக்கும்.தொழிலுக்கு தேவையான இட வசதி, பண வசதி தாரளமாக கிடைக்கும். சமுகத்தில் நற்பெயரக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட களங்கங்கள் விலகும்.பெண் வழி பிரச்சனைகள் வராமல் இருக்க மிகவும் கவனத்துடன் இருக்கவும். பணி புரிவோருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்படும்.
மீனா ராசி : 12 ராசி காரர்களில் மிகவும் எச்சரிக்கையுடன் அடுத்த இரண்டரை வருடங்களை கடத்த வேண்டியவர்கள் நீங்கள்தான். இரவு நேர நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும்.வாகனகளில் செல்லும்போது மிதமான வேகத்தை கடை பிடிக்கவும். பணி மாற்றம் ஊர் மாற்றம் போன்றவி ஏற்பட்டு மனதிற்க்கு பிடிக்காத சூழ்நிலைகள் ஏற்படும். சம்பள உயர்வை தற்போது எதிர்பார்க்க வேண்டாம்.

No comments:

Post a Comment

Powered by Blogger.